இந்தியாவில் முதல் முறையாக எத்தனால் எனும் எரி பொருள் மூலம் இயங்கும் பேருந்து ஓட்டத்தை மராட்டிய மாநிலம் நாகபுரி நகரத்தில் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி துவக்கி வைத்துள்ளார்.
எத்தனால் என்கிற எரியெண்ணெய் விவசாய விளைபொருள்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. பெட்ரோலுக்கு நிகரான எரிதிறன் கொண்டது. எத்தனால் என்பது உயிர் காற்றான ஆக்ஸிஜனை உள்ளடக்கிய நிறமற்ற ஒரு எரிதிரவம் ஆகும்.
பிரேசில் நாட்டில் எத்தனால் எனும் இந்த இயற்கை எரி பொருள் மூலம் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து எந்திரங்களும் இயக்கப்படுகின்றன. பிரேசில் நாட்டில் கரும்பிலிருந்து எத்தனால் உற்பத்தி செய்யப்படுகிறது.
அமெரிக்கா போன்ற வல்லரசு நாட்டில் கூட, சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்தில் எத்தனால் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் மக்காச்சோளத்திலிருந்து எத்தனால் உற்பத்தி செய்யப்படுகிறது.
பிரேசில் நாட்டில் 1980-ஆம் வருடத்திற்குப் பிறகு தயாரிக்கப்பட்ட அனைத்து வாகனங்களின் என்ஜின்களும் பெட்ரோல், எத்தனால் என இரண்டு வகையான எரிபொருள்களின் மூலமும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களில் சிறு மாற்றத்தை செய்வதன் மூலம் எத்தனாலை முழுமையாகப் பயன்படுத்த முடியும்.
தற்போது இந்தியாவில் எரிவாயு, பெட்ரோல் இரண்டையும் பயன்படுத்தக்கூடிய வகையில் வாகனங்களில் பெட்ரோல் என்ஜின்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், வாகன என்ஜின்களில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் தற்போது உள்ள நிலையிலேயே ஐம்பது சதவீதம் வரை எத்தனால் கலந்த பெட்ரோல், டீசலை பயன்படுத்தி நம் நாட்டில் வாகனங்களை இயக்கலாம்.
கடந்த 2002-ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு, எரிபொருள்களுடன் ஐந்து சதவீதம் வரை எத்தனாலை கலந்து பயன்படுத்தலாம் என உத்தரவு பிறப்பித்தது. மத்திய அரசாங்கத்தின் அரசிதழில் அரசாணையாகவும் அது வெளியிடப்பட்டது.
மேலும், எத்தனாலை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் மூலப்பொருள்களான விவசாய விளைபொருள்களை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தவும், கரும்பு மற்றும் மக்காச்சோள சாகுபடி நிலப்பரப்பை அதிகப்படுத்தவும், சர்க்கரை ஆலைகளிடமிருந்து எத்தனாலை கொள்முதல் செய்யவும், எத்தனாலுக்கு உற்பத்தி வரி விதிக்கலாமா, வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கவும், எத்தனால் உற்பத்தி செய்வதற்கு தகுதியான எந்திரங்களை எங்கிருந்து வாங்கலாம், எப்படி வாங்கலாம், எந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யலாம் ஆகியவை குறித்தெல்லாம் ஆய்வு செய்யவும், மத்திய மாநில அரசுகளோ அல்லது எண்ணெய் நிறுவனங்களோ, எத்தனாலை மக்களுக்கு விநியோகிக்க உரிய வழிமுறைகளை செய்யவும், மேலும் எத்தனால் பயன்பாடு குறித்த பல்வேறு முடிவுகளை எடுக்கவும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கமிட்டிகள் அமைக்கப்பட்டன.
முதல் கட்டமாக, 2003-ஆம் வருடத்திற்குள் 9 மாநிலங்களில் இதனை செயல்படுத்தவும், தொடர்ந்து எத்தனால் பயன்பாட்டை பாரத நாடு முழுவதும் அதிகரிக்கவும் தனித்தனியாக கமிட்டிகள் அமைக்கப்பட்டன.
2017-ஆம் ஆண்டிற்குள் 20 சதவீதம் எத்தனால் கலந்த எரிபொருளை நாடு முழுவதும் கொண்டு வர வேண்டும் என அன்றைய உணவுத்துறை அமைச்சர் சரத்பவார் தலைமையில் ஏழு அமைச்சர்கள் மற்றும் திட்டக்கமிஷனை உள்ளடக்கிய கமிட்டியும் அமைப்பட்டது. கமிட்டிகள் இயங்காத நிலையிலேயே இருந்தன.
2007-ஆம் வருடம் உலக சுற்றுச்சூழல் தினத்தன்று, இந்தியாவிற்கு வருகை தந்த பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனெசியோ லுலாட சில்வா முன்னிலையில் நடைபெற்ற மத்திய அரசு நிகழ்ச்சி ஒன்றில், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் எத்தனால் பயன்பாட்டின் மூலம் இந்தியாவில் பசுமையான சூழலை உருவாக்குவோம் என உறுதி மொழி கொடுத்தார்.
ஆனால், காங்கிரஸ் ஆட்சி முடிவடையும்வரை எத்தனால் பயன்பாடு இந்தியாவில் எங்கும் நடை முறை படுத்தப்படவில்லை.
12 வருடங்களுக்கு முன்பாக (2002-இல்) மத்திய அரசு எத்தனால் எரிபொருள் குறித்து பிறப்பித்த உத்தரவை யார் தடுத்தார்கள் என்பது புரியவில்லை. இதனால், இதுவரை ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு யார் பொறுப்பு என்றும் தெரியவில்லை.
தற்போது மோடி அரசு பதவியேற்று நூறு நாள்களுக்குள்ளாக மராட்டிய மாநிலம் நாகபுரி நகரத்தில் எத்தனால் எரிபொருள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
நமது நாட்டில் 70 சதவீத பெட்ரோலிய பொருள்களின் தேவை, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதன் மூலமே தீர்க்கப்படுகிறது. நமது நாட்டின் எண்ணெய் கிணறுகள் மூலம் வெறும் 30 விழுக்காடு அளவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.
எரிபொருள் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் எண்ணெய் நிறுவனங்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றி அமைக்கின்றன.
ஆண்டுதோறும் பெட்ரோலிய எரிபொருள் இறக்குமதிக்காக சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் இந்திய அரசு செலவழித்து வருகிறது. இதன் மூலம் நமது நாட்டில் அந்நியச் செலாவணி கையிருப்பு பெரும் நஷ்டம் அடைகிறது.
பெட்ரோலிய பொருள்களில் எத்தனால் கலந்து உபயோகிப்பதன் மூலம் வருடத்திற்கு சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் வரை மிச்சப்படுத்த முடியும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு நம் நாட்டின் அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாகப் பாதிக்கிறது. நமது நாட்டின் பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. விலைவாசியும் விஷம் போல் உயர்கிறது. எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியங்கள் வழங்கப்படுவதன் மூலமும் மத்திய அரசுக்கு பெருந்தொகை செலவாகிறது.
இதற்கெல்லாம் ஒரே தீர்வு, எத்தனால் பயன்பாட்டை 70 சதவீதம் பெட்ரோலியப் பொருள்களோடு கலந்து பயன்படுத்துவதே ஆகும். மீதி 30 விழுக்காடு எரிபொருள் தேவையை உள்நாட்டு உற்பத்தி மூலம் தன்னிறைவு செய்து கொள்ளலாம்.
இதன் மூலம் எண்ணெய் இறக்குமதியைத் தவிர்க்கலாம். அனைவரும் அறிந்த இந்த உண்மையை நடைமுறைப்படுத்த கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் அரசு உரிய நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை.
மேலும், பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களால் இயங்கும் வாகனங்கள் மற்றும் எந்திரங்கள் வெளியிடும் கார்பன் காரணமாக பெருமளவில் புகை மாசு உருவாகி சுற்றுச்சூழல் பெரிதும் கெடுகிறது.
ஆனால், கரும்பு, மக்காச்சோளம், குச்சிக்கிழங்கு, உருளைக் கிழங்கு போன்ற விவசாய விளைபொருள்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எத்தனால் எரிபொருள் மூலம் வாகனங்கள் மற்றும் எந்திரங்கள் இயக்கப்படும் போது உயிர்காற்றான ஆக்ஸிஜன் பெருமளவில் வெளிப்படுகிறது. புகை, மாசு எதுவும் கிடையாது.
தாவரங்கள் நாம் சுவாசித்து வெளியேற்றுகின்ற கார்பன்-டை-ஆக்சைடை உள்வாங்கி ஆக்சிஜனை வெளியேற்றி மனித குலத்திற்கு நன்மை பயப்பது போல, எத்தனாலில் இயங்கும் எந்திரங்கள் ஆக்ஸிஜனை வெளிப்படுத்துகின்றன.
இந்தியாவில் விளைவிக்கப்படும் கரும்பு முழுமையாக சர்க்கரை உற்பத்திக்கு மட்டுமே பயன்படுகிறது. பின்னர் சர்க்கரை ஆலைக் கழிவுகளிலிருந்து மொலாசஸ், ஆல்கஹால் (எரிசாராயம்), மதுபான வகைகளும் தயாரிக்கப்படுகின்றன. இருந்த போதும் சர்க்கரை ஆலைகள் நஷ்டத்தில் இயங்குவதாகச் சொல்கிறார்கள்.
மேலும், கரும்பு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காத நிலை உள்ளது. அதுமட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு சர்க்கரையும் மலிவாக கிடைப்பது இல்லை. அவ்வப்பொழுது சர்க்கரை தட்டுப்பாடும் ஏற்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து சர்க்கரையும் இறக்குமதி செய்யும் தேவையும் ஏற்படுகிறது.
கரும்புச் சக்கையிலிருந்து எத்தனால் தயாரிப்பதன் மூலம் விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும்; சர்க்கரை ஆலைகளும் லாபத்தில் இயங்கும்; சர்க்கரை விலையும் குறையும்.
மேலும் எத்தனால் உற்பத்தி தொழிற்சாலைகள் மூலம், புதிய தொழில் வாய்ப்புகளும், வேலை வாய்ப்புகளும் பெருகிடும். விவசாயம் லாபகரமானத் தொழிலாக மாறும்.
இந்தியாவில் கரும்பு மற்றும் மக்காச்சோளத்திலிருந்து எத்தனால் தயாரிப்பதன் மூலம், விவசாயிகள் வளமான வாழ்வைப் பெறுவார்கள்.
எத்தனால் பயன்பாட்டின் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாகக் குறைந்திடும். விலைவாசி உயர்வும் கட்டுப்படுத்தப்படும்.
எனவே, எத்தனால் எரிபொருள் பயன்பாட்டுத் திட்டம் நாடு முழுக்க விரிவடைய அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
மாநில அரசுகளும், பொது மக்களும் முழுமையான ஒத்துழைப்பு நல்கி நம் நாட்டை வளமான தேசமாக மாற்றிட வேண்டும்.
Source:Dinamani
Tuesday, September 2, 2014
Friday, March 7, 2014
மரண தண்டனைக்கு மரணம்
கொடுங் குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை அமலில் உள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் கழகம் மரணதண்டனை ஒழிக்கப்ட வேண்டும் என்று 1948இல் இருந்தே வலியுறுத்தி வருகிறது.
அப்போது ஆறு நாடுகள் மரண தண்டனை இல்லாதவையாக இருந்தது. இப்போது 195 உலக நாடுகளில் 40 நாடுகளில் மட்டுமே மரண தண்டனை சட்டத்தில் அமலில் உள்ளது. கடைசியாக 2013இல் மரண தண்டனையை விலக்கிய நாடு லாட்வியா.
பொருளாதார முன்னேற்றம் அடைந்த நாடுகளில் அமெரிக்காவைத்தவிர மற்ற நாடுகள் மரண தண்டனையை விலக்கிவிட்டன. பின் தங்கிய நாடுகளைக் கொண்ட ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில்தான் மரணதண்டனை அதிகம். 2012இல் உலக நாடுகளில் விதிக்கப்பட்ட மரண தண்டனைகளின் எண்ணிக்கை 1,722. இது 2011இல் விதிக்கப்பட்ட 1,923 தண்டனைகளை விட சற்று குறைவு.
2007-12 ஐந்து வருடங்களில் சீனாவில் சுமார் 4,000 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இரானில் 1,663, சவுதி அரேபியாவில் 423, அமெரிக்காவில் 220, பாகிஸ்தானில் 171, இந்த கணக்கு "ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்' வெளியிட்ட தகவலின் அடிப்படையில். தோராயமாக இருந்தாலும் மறுப்பதற்கில்லை. நமது நாட்டில் கசாப், அப்சல் குரு இருவர் தூக்கிலிடப்பட்டனர்.
தமிழ் நாட்டில் 1947இல் இருந்து இதுவரை 292 குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர். கடைசி தூக்கு ஆட்டோ சங்கர், வருடம் 1995, சேலம் மத்திய சிறையில். இப்போது சுமார் 8 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிலுவையில் உள்ளது.
மக்களின் வியர்வையால் செதுக்கப்பட்ட கற்களால் சிறை எழுப்பி அவர்களையே சிறையிலிட்டார்கள் ஆட்சியாளர்கள் என்ற அந்த கால அடக்குமுறை மாறி, சிறைச்சாலைகள் அறச்சாலைகளாகவும் சீர்திருத்தும் மையங்களாகவும் மாறவேண்டும் என்ற குறிக்கோள் முன்வைக்கப்பட்டுள்ளது. சிறைச் சுவர்கள் சட்டம் என்ற கற்களால் செதுக்கப்பட்டவை. மனித உரிமைகள் சிறையில் ஊடுருவ சிறைக் கதவுகள் தடையல்ல என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகளாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் மரணதண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்த தீர்ப்பிற்குப் பிறகு, மரண தண்டனை சட்டத்தில் இடம் பெற வேண்டுமா என்பது விவாதத்திற்கு வந்துள்ளது.
இந்தியாவில் 111 மத்திய சிறைகள் உள்ளன. எல்லா மத்திய சிறைகளிலும் தூக்கு மேடை இருக்கும். மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களை குற்றவியில் சட்டம் 366(2)இன் படி சிறை அதிகாரிகள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, அவர்களை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும். சட்டப்படி சாகடிக்கப்படுவதற்காக இந்தியாவில் பிறந்த ஜார்ஜ் ஆர்வெல் என்ற பிரசித்தி பெற்ற எழுத்தாளர் தூக்கிலிடப்படும் சடங்கை தத்ரூபமாக விவரிக்கிறார்.
தூக்கிலிடப்படும் நாள் குறிக்கப்பட்டவுடன் சிறையில் ஒரு சோகம் படர்ந்து விடும். எல்லாரையும் ஒரு பயம் பிடித்துக் கொள்ளும். மரண தண்டனைக்கு உரித்தான எந்த குற்றமாக இருந்தாலும், அதை மறந்து இறக்கப் போகிறவன் மீது ஒரு பாசம் ஏற்பட்டு விடும். நன்றாகத்தானே இருக்கிறான் அவனது அங்கங்கள், உள் உறுப்புகள் நன்றாக இயங்குகின்றன நோய் நொடியில்லை, ஏன் அவனை வலிய கொல்ல வேண்டும் என்ற உணர்வு வரும்.
தூக்கிலிடும் நாளுக்கு முன் முழுமையான மருத்துவ பரிசோதனை செய்யப்படும். எடை உயரம் அளவு எடுத்து, அந்த எடையின் ஈடாக ஒரு மூட்டையை வைத்து தூக்கு மேடையில் ஒத்திகை நடத்தப்படும். அவனது எடையை தாங்க வல்லதாக எந்த அளவுக்கு சுருக்குக் கயிறு இருக்க வேண்டும், எந்த உயரத்தில் இருந்து கயிறு தொங்கப்பட வேண்டும் போன்றவை நிர்ணயிக்கப்படும்.
தூக்கு மேடைக்கு தண்டனை பெற்றவரை அழைத்துச் செல்லும் வழி தனி வழி. அன்று மட்டும் அந்த வழியில் கதவு திறக்கப்பட்டு மூடப்படும். கடைசி நாள் அவருக்கு விருப்பமான உணவு வழங்கப்படும். நிறைவேற்றக் கூடிய விருப்பங்கள் விதிகளுக்குட்பட்டு நிறைவேற்றி வைக்கப்படும்.
பகத்சிங் தூக்கிலிடுவதற்கு முன்பு வரை லெனில் எழுதிய "அரசும் புரட்சியும்' புத்தகத்தை தீவிரமாக படித்து முடித்துவிட்டு, தனது கடைசி உணவாக சிறையை துப்புரவு செய்யும் துப்புரவாளர் கையால் செய்த சப்பாத்தி வேண்டும் என்று கேட்டு சாப்பிட்டார் என்ற பதிவு உள்ளது. அதுதான் எத்தகைய உயர்ந்த உள்ளம்?
எவ்வளவுதான் மனதை தேற்றிக் கொண்டு தைரியமாக இருந்தாலும் கடைசி நாள் குற்றவாளிக்கு தூக்கம் வராது; மனம் அலைபாயும். அதிகாலையில் தூக்கிலிடும் சடங்கு துவங்கப்படும். தூக்கிலிடப்படுபவர் "சாலிட்டரி கன்ஃபைன்மென்ட்' என்ற தனி அறையில் வைக்கப்படுவார்.
காலையில் குளியல், பிறகு விருப்பமான உணவு உண்ட பிறகு சிறைக்காவலர்கள் அவரை "எஸ்கார்ட்' செய்ய வருவார்கள். ஆனால் அழைத்துக் செல்வது மிக சிரமம். சிறைக் கம்பிகளை பிடித்துக் கொண்டு போக மறுப்பார். நல்லதனமாக பேசி தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
மேடையில் நெம்புகோலால் இயக்கக்கூடிய இரும்பு தரையில் நிற்க வைத்து முகத்தை முதலில் துணியால் மூடி பிறகு கயிற்றை கழுத்தில் கட்டுவார்கள். அப்படிக் கட்டும்போது உடம்பு விறைக்கும், மூச்சிறைக்கும். தானாகவே கடவுள் நாமத்தை ஜபிப்பார்கள் முனகுவார்கள் அல்லது கூக்குரலிடுவார்கள்.
சிறை கண்காணிப்பாளர் தலைமையில் சிறைப் பணியாளர்கள், நெம்புகோலை இயக்குபவர், மருத்துவர் ஆஜரில் இருப்பார்கள். சிறைக் கண்காணிப்பாளர் கடிகாரத்தைப் பார்த்து எந்த நேரத்தில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று உத்தரவில் குறிக்கப்பட்டிருக்கிறதோ, கடிகாரமுள் அந்த நேரத்திற்கு வரும் வரை காத்திருப்பார்.
கடிகார முள் நெருங்க நெருங்க சாவை எதிர் கொள்ள முடியாது, தண்டனையாளரின் கூக்குரல் அதிகரிக்கும். எல்லார் மனதிலும் கவலை, சோகம், குற்ற உணர்வு கலந்த நிலை. மனிதர்கள் தானே. ஏதோ கடமை என்று இருந்து விடமுடியாது.
சிறை அதிகாரி கை அசைத்தவுடன் நியமிக்கப்பட்ட சிறை அலுவலர் நெம்பு கோலை மன உறுதியோடு இயக்க வேண்டும். தண்டனையாளி நின்று கொண்டிருக்கும் இரும்புத் தளம் விலக, அவர் முழுமையாக உடம்பின் பளுவில் தொங்க, கழுத்தில் கயிறு இறுக்கமாவதில் உயிர் போகும். நொடிப் பொழுதில் உயிருள்ள உடம்பு சடலமாகும்.
மருத்துவ அதிகாரி பரிசோதனை செய்து உயிர் பிரிந்து விட்டது என்று சான்றிதழ் அளிக்க வேண்டும். உயிரோடு சிறைக்கு வந்தவர் தண்டனை பெற்று சடலமாக வெளியில் அனுப்பப்படுவார். சடலம் வெளியேறுவதற்கும் பிரத்யேகமான தனிவழி. மற்ற நேரத்தில் உபயோகப்படுத்துவதில்லை.
சடங்கு முடிந்த பிறகு சிறையில் ஒரு மயான அமைதி. அதற்குப்பிறகுதான் அடுப்பில் உலைவைப்பார்கள். எல்லா கைதிகளும் குளித்தவுடன் உணவு கொடுக்கப்படும். சிலர் வருந்துவார்கள், சிலருக்கு விரக்தி, மற்றவர்க்கு எப்போது எல்லாம் முடியும் சாப்பாடு எப்போது கிடைக்கும் என்ற யதார்த்தம்.
தமிழ் மக்களின் உணர்வைப் புரிந்து கொண்டு மனிதாபிமான அடிப்படையில் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு தமிழக அரசு தண்டனையைத் தளர்த்தி ஆணை கொடுத்துள்ளது. சட்டத்தைப் புரிந்து கொள்ளாமலும், புரிந்ததை திரித்தும் காழ்ப்புணர்ச்சியால் விதண்டாவாதத்தில் சிலர் இறங்கியுள்ளது வருந்தத்தக்கது. வாதம் என்று வந்தால் இலங்கைத் தமிழர் பிரச்னையை முழுமையாக ஆராய வேண்டும். இந்த தண்டனை தளர்ச்சியை மட்டும் தனியே பார்க்கலாகாது.
1970, 80களில் நடந்த இனப்படுகொலைகள், அதற்குப் பிறகு தமிழகம் வந்த அகதிகள், அமைதிகாக்க என்று இந்திய ராணுவம் அனுப்பியதின் விளைவுகள், இலங்கை தமிழர் விடுதலை இயக்கங்களின் நடவடிக்கைகள், அவர்களை சுய ஆதாய நோக்கோடு ஆதரித்தவர்களின் பின்னணி, சமீபத்திய இனப்படுகொலைகளின் தாக்கம், இந்தியாவின் கண்ணோட்டம், கொள்கை, நிலைப்பாடு என்று கணக்கிலடங்காத வாதங்கள் இருக்கின்றன.
மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முடிவின்றி காலதாமதம் ஏற்பட்டால் அதுவே மரணதண்டனையை தளர்ப்பதற்கான காரணமாகும் என்று உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் மரண தண்டனையை ரத்து செய்துள்ளது.
பல வருடங்களுக்கு முன்னால் தமிழகத்தை உலுக்கிய விஷ ஊசி வழக்கைவிட கொடுமையான குற்றத்தை நினைத்துப்பார்க்க முடியாது. அதில் தாமதம் காரணமாக மரணதண்டனை ரத்தானது.
மரண தண்டனைப் பற்றி காந்திஜி கூறுகிறார். "எந்த ஒரு குற்றவாளியையும் கழு வேற்றுவதற்கு எனது மனசாட்சி எந்த நிலையிலும் இடம் கொடுக்காது. கடவுள் கொடுத்த உயிரை இயற்கைக்குத்தான் எடுக்க உரிமை உள்ளது'.
மரண தண்டனை சட்டத்திலிருந்து நீக்குவது தான் நாட்டின் ஒருமித்த முடிவாக இருக்க முடியும் என்று அம்பேத்கரும், மரண தண்டனை குற்றங்களுக்கு தீர்வு அல்ல என்று ஜெயப் பிரகாஷ் நாராயணனும் அறிவுறுத்தியுள்ளார்கள்.
மரண தண்டனை கழுவேற்றப்பட வேண்டும்.
Source:Dina Mani

வீணாகும் விளைபொருள்கள்
நம் நாட்டில் 2005 முதல் 2013 வரையிலான எட்டாண்டு காலத்தில் 1.94 லட்சம் டன் உணவு தானியம் வீணாகியுள்ளதாக, இந்திய உணவுக் கழகம் வெளியிட்டுள்ள ஒரு தகவல் கூறுகிறது. நாட்டின் 23 பகுதிகளில் எவ்வளவு டன் உணவு தானியம் வீணடிக்கப்பட்டுள்ளது என்ற தகவலை இக்கழகம் வெளியிட்டுள்ளது. இதில் அரிசியும், கோதுமையும் முக்கிய பங்கு வகிக்கின்றன. கோதுமை உற்பத்தியின் கேந்திரமாக விளங்கும் பஞ்சாப் மாநிலத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த உணவு தானியத்தில் பாதியளவுக்கு வீணாகியுள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத் பவார், கடந்த ஆண்டில் 255 மில்லியன் டன்னாக இருந்த உணவு தானிய உற்பத்தி, நடப்பு ஆண்டில் 263 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது என தெரிவித்திருக்கிறார். ஆனால், விளையும் தானியத்தை முறையாகச் சேகரித்து, பொதுமக்களுக்கு முறையாக கொண்டு சேர்க்கும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது.
அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாததே அதிக அளவில் தானியம் வீணாவதற்கு காரணம். மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. தற்போதைய உணவு தானிய உற்பத்தி 263 மில்லியன் டன். 2030-ல் இதன் தேவை 345 மில்லியன் டன்னாக இருக்கும். அதாவது, இப்போதிருந்தே ஆண்டுக்கு சுமார் 5.5 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
ஒரு பொருள், விளைநிலத்திலிருந்து வியாபாரியின் கைக்கு சென்று, அங்கிருந்து அது நுகர்வோரின் கைக்கு மாறும்போது, சுமார் 50 சதவீத அளவுக்கு வீணாகிறது என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதாவது, உற்பத்தி நிலை, பதப்படுத்துதல், விற்பனை மையம் என சங்கிலித் தொடர் நடவடிக்கையில் ஒவ்வொரு இடத்திலும் பொருள் வீணாவது தவிர்க்க முடியாதது என ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
வளரும் நாடுகளில், உற்பத்தி நிலையிலேயே விளைபொருள்கள் வீணாகின்றன என்றும், வளர்ந்த நாடுகளில் தயாரிக்கப்பட்ட நிலையில் அவை அதிகம் வீணாகின்றன என்றும் தெரிவிக்கின்றனர். தயாரிக்கப்பட்ட உணவுப் பொருளை பேக்கிங் செய்து விற்பனைக்காக குளிர்சாதனப் பெட்டிகளில் மாதக் கணக்கில் வைக்கின்றனர். அவை விற்பனையாகாத நிலையில் வீணாகின்றன.
மேலும், பயிர்களை அறுவடை செய்ய இயந்திரங்களை பயன்படுத்துவதாலும், தானியங்கள் வீணாவதாகக் கூறப்படுகிறது. தானியங்களை மதிப்புக்கூட்டுப் பொருளாக மாற்றி, தரமானதாக வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டுமானால், சேதாரம் தவிர்க்க முடியாது என்று வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
உலக அளவில் ஆண்டுக்கு 1.3 பில்லியன் டன் உணவு தானியம் வீணாகிறது. இதில் வளர்ந்த நாடுகளில் வீணாகும் அளவு சற்றுக் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் உணவு தானிய உற்பத்தி எப்படி இருக்கும் என்பதை வேளாண் துறையினர் கணிக்கின்றனர். ஆனால்,உற்பத்தி அதிகரித்தால், அந்த தானியங்களை முறையாகச் சேமிக்க உரிய வழிவகை நம்மிடம் இல்லை.
உற்பத்தி செய்த பொருளை ஏற்றுமதி செய்யலாம் என்றால், அரசின் வர்த்தகக் கொள்கைகள் முட்டுக்கட்டையாக உள்ளன. இப் பிரச்னை விரைவில் களையப்பட வேண்டும்.
நாட்டில் உணவு பதப்படுத்துதல் துறை பெரிய அளவில் செயல்பட்டு வருகிறது. சுமார் 66 லட்சம் பேர் இத் துறையில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தாலும், உற்பத்தியாகும் உணவு தானியங்கள், காய்கறி, பழங்கள், இறைச்சி, பால் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது, பதப்படுத்தும் அளவு குறைவாகவே உள்ளது. இதை அதிகப்படுத்தினால், வீணாவதைத் தடுக்கலாம்.
மேலும், விளைந்த பொருள்களை சேமிக்க உரிய கிடங்கு வசதிகளை நவீன தொழில்நுட்பத்துடன் அந்தந்த பகுதியில் ஏற்படுத்த வேண்டியது அவசியம். ஒவ்வோர் ஆண்டும் நிதிநிலை அறிக்கையில், நவீன சேமிப்புக் கிடங்குகள் அமைக்க இத்தனை கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கிறார்களே தவிர, அது செயல்பாட்டுக்கு வருவதில்லை.
மத்திய, மாநில அரசுகள் சார்பில் செயல்படும் தானியக் கிடங்குகள் பலவும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. கிடங்கு வசதி இல்லாததால், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் தானியங்கள் மழையிலும், வெயிலும் கிடந்து வீணாகின்றன. இதனால், போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் போராட்டம் நடத்த நேரிடுகிறது.
விலையை அதிகரிக்கும் நோக்கில், பொருள்களைச் சேமித்து, சந்தையில் தேவையை உருவாக்கி, அதிக விலைக்கு விற்கும் கலாசாரமும் அதிகரித்து வருகிறது. இதுவும் தடுக்கப்பட வேண்டும்.
மழையின்றி, அதனால் உரிய நீரின்றி கருகும் பயிரைக் கண்டு கண் கலங்கி நிற்கும் விவசாயி, ஏதோ கொஞ்சம் விளைந்ததை சந்தைக்கு அனுப்பும்போது, அவையும் வீணானால்...?
Source:Dina Mani
Thursday, December 20, 2012
கேள்விக்குறியாகும் பொது சுகாதாரம்
இந்தியாவில் பொது சுகாதாரம் தேய்ந்துகொண்டே வருவது அதிர்ச்சி அளிக்கிறது என மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அண்மையில் தெரிவித்துள்ளார். பொது சுகாதாரம் பேணாத காரணத்தால் ஏற்படும் விளைவுகளை நாம் அனுபவித்து வருகிறோம்.
பொது சுகாதாரத்தில் பிரதான பங்கு வகிப்பது பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம், குப்பை அள்ளுதல், கழிவுநீர் செல்ல வாய்க்கால்கள் அமைப்பது போன்றவை, கழிப்பறை வசதிகளைச்செய்து தரவது. இதனை உள்ளாட்சி அமைப்புகள் சரியாகச் செய்தால்தான் மக்கள் நலமுடன் வாழலாம். மக்களுக்கான குடிநீர், சுகாதாரம், மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
இதில் ஏதேனும் ஒன்று கிடைக்காத நிலை உருவானாலும் அது மக்களை வெகுவாகப் பாதிக்கிறது. நீராதாரம் உள்ள பகுதியில் குடிநீர்த் திட்டங்களை உருவாக்கி பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
உள்ளாட்சி அமைப்புகள் முறையாக குடிநீர்த் திட்டங்களைப் பராமரிக்காத
காரணத்தால்தான் மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் கிருமிகள் கலந்து நோய்கள் பரவக் காரணமாகிறது என சுகாதாரத் துறையினர் புகார் தெரிவிக்கின்றனர்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகள் போன்றவற்றுக்கு மக்களுடைய அடிப்படைத் தேவைகளைக் கண்காணித்து வழங்க வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளன. சமீபகாலமாக குப்பைகளை அள்ளுவது, கழிவுநீர்ப் பாதைகளைப் பராமரிப்பது, பொதுக் கழிப்பிடங்களில் போதிய தண்ணீர் வசதியை ஏற்படுத்தி சுத்தமாகப் பராமரிப்பது ஆகியவற்றில் பரவலாக அக்கறை அற்ற போக்கே காணப்படுகிறது.
உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள்தொகைக்கு ஏற்ப துப்புரவுப் பணிக்கு, பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆனால் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுடன் ஒப்பிட்டால், கிராம ஊராட்சிகளில் துப்புரவுப் பணியாளர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பணி செய்கின்றனர். உதாரணமாக 7,000 பேர் வசிக்கும் ஊராட்சியில் துப்புரவுப் பணியாளர்கள் 3 பேர்தான் உள்ளனர்.
கிராமப்புறங்களில் சாலையோரங்களில் குப்பைகள், கழிவுகள் தேங்கிக் கிடக்கின்றன. மக்களுக்கு வழங்கும் குடிநீரும் நிறம் மாறி விநியோகிக்கப்படுவதாக புகார் கூறப்படுகிறது.
மக்களிடையே மாறிவரும் வாழ்க்கை முறையால் சுகாதாரச் சீர்கேடுகளும் பெருமளவில் அதிகரித்து வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் எளிதில் பாதிக்கப்பட்டு நோய்கள் பரவுகின்றன.
கிராம ஊராட்சிகளில் பணி செய்யும் துப்புரவுப் பணியாளர்களுக்கு ரூ. 1,500 சம்பளம் வழங்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லை என்பதால் அவர்கள் பணியில் ஆர்வத்துடன் கவனம் செலுத்துவதில்லை.
இதுவே சுகாதாரச் சீர்கேடுகள் அதிகரிக்க வழிவகுக்கிறது. ஊராட்சிகளில் புதிதாக துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு 20 ஆண்டுகளாகின்றன.
மக்கள்தொகைக்கு ஏற்ப கூடுதலான துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்ட பணியாளர்களைக் கொண்டுதான் கிராமங்களில் சுகாதாரத்தைப் பராமரிக்க வேண்டிய நிலை உள்ளது.
இப்போது மக்களை டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்றவை அச்சுறுத்தி வருகின்றன. இக் காய்ச்சல் பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போன்ற விழிப்புணர்வு முகாம்கள் நடத்திப் பலனில்லை. இதுபோன்ற கூட்டங்களில் குறைந்த நபர்களே பங்கேற்பதால் அவை பலன் தருவதில்லை.
பொது சுகாதாரத்தைப் பேணுவதில் மக்களின் பங்களிப்பும் அவசியமாகிறது. நம்மைச் சுற்றி உருவாகும் சுகாதாரச் சீர்கேடுகளைத் தவிர்க்க வேண்டும். அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மத்திய, மாநில அரசுகளும் மக்களுக்கான சுகாதாரத்தைப் பேண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Wednesday, November 28, 2012
மலைக்க வைக்கும் "மலாலா
"பெண்ணுக்கு பெண்தான் எதிரி' என்று மாமியார் மருமகள் சச்சரவு பற்றி அங்கலாய்ப்பார்கள். பெண்ணுக்குப் பல முனைகளிலிருந்து பிரச்னைகள் வருகின்றன. பெண் சிசுவதை, பாலியல் கொடுமை, கல்வி மறுப்பு, வரதட்சணைத் தொல்லை, புகுந்த வீட்டில் பிரச்னை, அலுவலகங்களில் உரிமை பறிப்பு என்று திணற அடிக்கும் பிரச்னைகள் நமது நாட்டில். மேலை நாடுகளிலும் வேறுவிதமான எதிர்ப்புகள்.
ஆனால் பின்தங்கிய நாடுகள், மூடப்பழக்கங்களில் உழலும் சமுதாயங்கள், தீவிரவாதம் அன்றாட நிகழ்வாக இருக்கும் இடங்களில், பெண்கள் அதுவும் குழந்தைகள் பல கொடுமைகளுக்கு உள்ளாகிறார்கள்.
தீவிரவாதம் மிகுந்த இடங்களில் பள்ளிகள் முறையாக நடப்பதே அபூர்வம். நாட்கணக்காக மூடியிருக்கும். நடத்தப்படும் சில நாள்களிலும் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பயம்; இந்தச் சூழலில் எவ்வாறு படிக்க முடியும்? உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு "கற்றலில் இனிமை' என்று அந்தப் பிஞ்சு உள்ளங்கள் கல்வியில் ஈடுபட முடியுமா?
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ளது கைபர் பக்துன்க்வா. அதில் ஸ்வாட் மாவட்டத்தில் மிங்கோரா என்ற சிறு நகரத்தில் வசிப்பவள் மலாலா யூசஃப்சாய். தந்தை யூசஃப்சாய் சமூக ஆர்வலர். எல்லோருக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துபவர். பஸ்தூன் வம்சாவளியில் வந்த முஸ்லிம் குடும்பம். பேசுவதோடு மட்டுமில்லாது ஒரு பள்ளியும் நடத்துகிறார். சிறுமி மலாலா, தந்தையின் கல்விச் சிந்தனைகளால் கவரப்பட்டு அதிக ஈடுபாடோடு சிறு வயதிலிருந்தே படிப்பில் கவனம் செலுத்தினாள்.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்த ஸ்வாட் மாவட்டம் தலிபான் தீவிரவாதிகள் பிடியில் சிக்கியுள்ளது. உள்நாட்டுப் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் தாக்குதலும் எதிர்தாக்குதலும், இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும். கல்விக்கூடங்கள் மூடிக் கிடக்கும்.
கல்வி அடிப்படை உரிமை - எவ்வாறு தீவிரவாதிகள் அந்த உரிமையைப் பறிக்க முடியும் என்று சிறுமி மலாலாவின் உள்ளம் கொந்தளித்தது. தனது ஆதங்கத்தை இணையதளத்தில் இணைய வலைமூலம் உருது மொழியில் அவ்வப்போது வெளியிட்டாள். தந்தையும் ஊடகங்கள் மூலமாக தீவிரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். மலாலாவும் இந்தக் கூட்டங்களுக்குச் சென்று பேசுவாள். சிறுமியின் பேச்சும் நியாயத்திற்கும் உரிமைக்கும் குரல் கொடுக்கும் தைரியமும் எல்லோரையும் கவர்ந்தது.
பி.பி.சி. ஊடகம் அவளது இணைய வலையை வைத்து நிகழ்ச்சி நடத்தியது. அவளது பாதுகாப்பு கருதி புனைபெயரில் அவளது கருத்துகள், மிங்கோரா நகரத்தில் தீவிரவாத நிகழ்வுகள், எவ்வாறு பெண்கள் தலிபான்களால் அடிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பது பற்றி விரிவாக எடுத்துரைத்தது. அந்த நிகழ்ச்சி அமைதிக்காகப் போராடுபவர்களின் ஆதரவைப் பெற்றது.
பயமின்றி கருத்துப் பரிமாற்றம் - அதுவும் தீவிரவாதிகள் பிடியில் சிக்கிய இடத்தில்; விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றி சிறுமி மலாலா கவலைப்படவில்லை, ஆனால் சிந்தித்தாள்.
"என்னைத் தீவிரவாதிகள் தாக்கினால் அவர்களிடம் நிச்சயமாகக் கேட்பேன், ""உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது, எங்களது கல்வி உரிமையைப் பறிக்க?'' என்று கேட்பேன்' என்று இணைய வலையில் பதிவுசெய்தாள்.
தீவிரவாதிகள் தாக்குதலில் பொது இடங்களும் பள்ளிக்கூடங்களும் சேதமடைகின்றன. பள்ளிக்கூடங்களோ செயல்படவில்லை. இயங்காத பள்ளிக்கூடங்களை ஏன் தகர்க்க வேண்டும்? அதில் தீவிரவாதிகளுக்கு என்ன பயன் என்று விரக்தியாக மலாலா தனது இணைய வலையில் குறிப்பிடுகிறாள்.
பதினான்கு வயது மலாலாவின் துணிச்சலும் அவளுக்குப் பெருகிவரும் ஆதரவும் தீவிரவாதிகளின் வெறுப்பைத் தூண்டியது.
கடந்த அக்டோபர் 10-ஆம் நாள் மலாலா பள்ளியிலிருந்து பஸ்ஸில் வீடு திரும்பும்போது அந்த வாகனம் தீவிரவாதிகளால் மடக்கப்பட்டது. பஸ்ஸில் ஏறிய தீவிரவாதிகள் மலாலாவை அடையாளம் கண்டு சுட்டனர். பாவிகளின் குண்டு அவளது தலையைத் துளைத்து கழுத்தில் சிக்கியது. மேலும் இரண்டு மாணவிகள் காயமுற்றனர்.
உடனடியாக மலாலா பெஷாவரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பிறகு குண்டு எடுக்கப்பட்டது. பின்பு இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் நகர எலிசபத் மருத்துவமனையில் மலாலாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மலாலா தாக்கப்பட்ட சம்பவம் மதம், நாடுகள் என்ற எல்லையைக் கடந்து எல்லோராலும் கண்டனம் செய்யப்பட்டது.
பிரபல மேற்கத்திய இசைப்பாடகி மோடன்னா, "மனித சுபாவம்' என்ற தனது பாடலை மலாலாவிற்கு அர்ப்பணித்தார். ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்தது.
பொதுச் செயலர் பான் கீ மூன், மலாலாவின் வீரச்செயல்களைப் பாராட்டி எல்லாப் பெண் குழந்தைகளுக்கும் கல்வி கொடுப்பதற்கு சர்வதேச அமைப்புகள் துரித முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
""நான் மலாலா'' என்ற முழக்கம் பெண் கல்வி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முக்கியமாகத் தீவிரவாதிகள் பிடியில் சிக்கிய இடங்களில் மாற்றுப்பாதை வகுக்கவும் வரையப்பட்டது.
பெண் கல்வி திட்டத்தில் முக்கிய மூன்று அம்சங்கள் உள்ளன. 1. எல்லாக் குழந்தைகளுக்கும் கல்வி அளிக்க திட்டம் வகுக்க வேண்டும். 2. எல்லா நாடுகளும் பெண் கல்விக்கு எதிரான பழக்கங்கள், நடவடிக்கைகளை சட்ட விரோதச் செயல் என்று பிரகடனப்படுத்த வேண்டும். 3. பள்ளிக்குச் செல்ல முடியாத 70 லட்சம் குழந்தைகளை 2015-க்குள் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ற குறிக்கோளை அடைய சர்வதேச அமைப்புகள் பாடுபட வேண்டும் என்பதாகும்.
மலாலா தாக்கப்பட்டு ஒரு மாதம் பூர்த்தியான தினம் "நவம்பர் 10', பெண் கல்வியை வலியுறுத்தும் தினமாக அனுசரிக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
பான் கீ மூன் தனது அறிக்கையில், ""சிறுமி மலாலா பெண் கல்விக்கு உலகின் முத்திரைச் சின்னம்'' என்று புகழ்ந்துள்ளார். ""நவம்பர் 10 - மலாலா நாள்'' உலகெங்கிலும் விழிப்புணர்வு தினமாகக் கொண்டாடப்பட்டது. சிறுமி மலாலா விரைவில் குணமடைய கூட்டுப் பிராத்தனை தொடர்ந்து நடைபெறுகிறது.
சிறுமி மலாலாவிற்கு உள்ள பொறுப்பும் துணிச்சலும் சிறிதளவும் மற்றவர்களிடம் இருந்தால் தீவிரவாதம் தலைதூக்க முடியாது. முறையற்ற தாக்குதல் என்ற பயத்தைப் பரவச்செய்து தீவிரவாதிகள் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்துகின்றனர். நமக்கேன் வம்பு என்று சாதாரண மக்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதைக் குறை கூற முடியாது. தீவிரவாதிகள் கை ஓங்கினால் மக்கள் முடங்குவது இயல்பு. மலாலாபோல் துணிச்சலாகக் குரல் எழுப்புபவர்கள் வெகு சிலரே. ஆனால், பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் சாதாரண மக்களுக்கு நம்பிக்கை எற்படும். பயம் தெளியும். தீவிரவாதத்தை ஒழிக்க அவர்களது ஒத்துழைப்பும் பெருகும்.
வன்முறையில் ஈடுபடுபவர்கள் போராளிகள் இல்லையேல் தீவிரவாதிகள் என்று கணக்குப் போடுவதால்தான் தீவிரவாதத்தை அறவே ஒழிக்க முடிவதில்லை. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தீவிரவாதத்தை ஒழிக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை அரசியலுக்கு அப்பாற்பட்டு எடுக்கப்படுகிறது.
நாம் தீவிரவாத ஒழிப்பு நாள், சத்பாவனா திவஸ், தேசிய ஒருமைப்பாடு தினம் என்று அந்தந்த நாள்களில் உறுதி மொழி எடுக்கிறோம் ஆனால் நடைமுறைகள் கேள்விக்குறியாக இருக்கின்றன.
""ஆயிரம் மலர்கள் பூக்கட்டும்'' என்பது போல ஆயிரமாயிரம் மலாலாக்கள் உலகில் உதயமாக வேண்டும். மலாலாவிற்கு வந்த உணர்வு நம்மிடமும் உள்ளது. ""நானும் மலாலா'' என்று வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுப்போம். அப்போதுதான் சாந்தி நிலவவேண்டும் என்பது மெய்ப்படும்.
Source: Dinamani
Monday, October 29, 2012
நீர்-இனி போர்: எதிரியாக மாறுமா எதிர்காலம்
பணத்தை தண்ணியா செலவழிக்கிறான்' என பழமொழி சொல்லப்போய், "தண்ணியை பணத்தைப் போல செலவழிக்கிறான்' என சொல்லும் காலம் நெருங்கி வருகிறது.
மண்ணுக்காக நாடுகள் முட்டிக்கொண்டதால் தான் இரண்டு உலகப் போர்கள் நடந்தன. எதிர்காலத்தில் இன்னொரு உலகப் போர் நடந்தால், அது நீருக்காக மட்டுமே நடக்கும் என்கின்றனர் அறிஞர்கள்.இதற்கு காரணம், மாறி வரும் சுற்றுச்சூழ்நிலைகளால், நீர் என்பதே அரிதாகி வருகிறது. ஆண்டுக்கு ஆண்டு, உலகுக்கு கிடைக்கும் நல்ல நீரின் அளவு குறைந்து கொண்டே போகிறது. செயற்கையாக நீரை தயாரிக்கலாம் என்றால், அது எளிதில் சாத்தியமாகாது. எனவே, இயற்கையாக கிடைக்கும் நீரை கைப்பற்ற, உலக நாடுகள் போட்டி போடும். தண்ணீர் இல்லாவிட்டால், வாழ்க்கையே இல்லை என்பதால், உலக நாடுகள், உச்சகட்டத்தில் மோதிக்கொள்ளும்.
பருவநிலை மாற்றம்:
பருவநிலை மாற்றத்தால், அதிக மழை அல்லது அதிக வெப்பம் என்ற நிலைமை ஏற்படுகிறது. சரியான நேரத்தில், மழை பெய்வது சமீப காலமாக நடப்பதில்லை. நூறு ஆண்டுகளுக்கு முன்பும் வறட்சி ஏற்பட்டது. அப்போதெல்லாம் தண்ணீரின் தேவை குறைவாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமையே வேறு.தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட காரணம் மக்கள் தொகை பெருக்கம், காடுகளை அழித்தல், மழை நீரை தேக்கி வைக்காதது, நதிகள் இணைக்கப்படாமல் இருப்பது, சுற்றுச்சூழல் மாசுபாடு, தொழில் மயம் ஆகியவை. தேவையை உணர்ந்து செயல்படாவிட்டால், 2015லேயே தண்ணீர் தேவை அதிகரித்து, உயிரினங்கள் அழியும் நிலை ஏற்படும். தண்ணீர் பற்றாக்குறையால், உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைந்து, விலை உயரும்.
பூமி, 71 சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது. 29 சதவீதம் நிலப்பரப்பாக உள்ளது. மொத்த தண்ணீரில் உப்பு நீரே அதிகம். 2.5 சதவீதம் நீர் மட்டுமே நல்லநீர். உலகில், 0.08 சதவீதத்துக்கும் குறைவான தண்ணீரை மட்டுமே பயன்படுத்த முடிகிறது. உலகளவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் 50 நாடுகளை 1999ல் ஐ.நா., அறிவித்தது. தற்போது விவசாயத்திற்காக 70 சதவீத நீர் பயன்படுத்தப்படுகிறது. இது 2020ல் 87 சதவீதம் ஆகும் என, உலக தண்ணீர் ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போது, உலக அளவில் ஐந்து பேரில் ஒருவருக்கு, சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை. ஒவ்வொரு நாளும், ஐந்து வயது பூர்த்தியடையாத, 30 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் பசி, தொற்று நோய்களால் இறக்கின்றனர். சுத்தமான குடிநீர், நல்ல சுகாதாரம், சரிவிகித உணவு போன்றவற்றின் மூலமே இதை சரி செய்ய முடியும்.
என்ன தீர்வு:
அனைத்து ஆதாரங்களுக்கும், அடிப்படையான தண்ணீரை பாதுகாப்பது நமது கடமை. நீராதாரங்களை மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும். அதிக மரங்களை நட வேண்டும். தண்ணீரை மறுசுழற்சி செய்து, விவசாயத்துக்கு பயன்படுத்தலாம். கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், சூரிய ஒளி மின்சாரம் போன்ற திட்டங்களை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும். சொட்டு நீர் பாசனம், நீர்தெளிப்பு போன்ற வற்றை பயன்படுத்தி தண்ணீரை சேமிக்கலாம்.
"மடி'யில் கை வைத்த கதை:
பற்றாகுறை ஏற்பட்டதும், "மடி'யில் கை வைத்த கதையாக, நிலத்தடியில் கை வைத்தோம். அந்த நீரையும் எக்கச்சக்கமாக உறிஞ்சிகிறோம். இது இன்னொரு ஆபத்து. இதனால், அந்த இடத்தின் இயற்கை சமநிலைக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கிணறுகள் வற்றி, விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்படுகிறது.
நீரின் தேவை:
விவசாயத்திற்கே அதிக நீர் தேவைப்படுகிறது. அடுத்ததாகத் தான் மற்ற உபயோகங்களுக்கு தேவை. 1970ம் ஆண்டில், உலகில் இருந்த மொத்த நீரில் 25 சதவீதத்தை பயன்படுத்தினோம். இது 1980ல், 45 சதவீதமாகவும், 1990ல் 65 சதவீதமாகவும் அதிகரித்தது. தற்போது உலகின் நீர்த் தேவை, மொத்த நீரில் 80 சதவீதத்தை நெருங்கி விட்டது. இதே நிலை தொடர்ந்தால், நீர் அரிதான பொருளாகும் அபாயம் இருக்கிறது. நீர் இல்லாவிடில், உலகம் அழிந்து விடும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கிறதா என்ன.
மாசுபடுத்தும் காரணங்கள்:நீர் மாசுபடுவதற்கு முக்கிய காரணமே மனிதர்களின் மனசாட்சி இல்லாத நடவடிக்கைகள் தான். தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கழிவுகள், வேதிப்பொருட்கள், ஆயில், பெயின்ட் போன்றவையாலும் நீர் மாசுபடுகிறது. இக்கழிவுகள் ஆற்று நீரை மட்டுமல்லாது, நிலத்தடி நீரையும் நாசம் செய்கின்றன. நிலத்தின் இயற்கை தன்மையே மாறுகிறது. வீட்டு கழிப்பறை, சாக்கடை ஆகியவற்றாலும் நீர் மாசுபடுகிறது. உலகம் முழுவதும் 40 சதவீதம் நிலத்தடி நீர் குடிநீராகவும்,60 சதவீத நிலத்தடி நீர், விவசாயத்துக்கும் பயன்படுகிறது.
செயற்கை நீர் சாத்தியமா:
செயற்கையாக நீரை உருவாக்க முடியுமா என்று ஆராய்ச்சியாளர்களை கேட்டால், முடியாது என்றே பதில் அளிக்கின்றனர். இருப்பினும், ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும், ஒரு ஆக்ஸிஜன் அணுவும் சேர்ந்தது தான் நீர். இந்த இரண்டு வாயுக்களும், எளிதாக கிடைக்கக்கூடியவை தான். ஆனாலும் இதை இணைத்து நீரை உருவாக்க முடிவதில்லை. காரணம், ஹைட்ரஜன் அணு தனித்து கிடைக்காது. ஆக்ஸிஜன், இரட்டை அணுவாகத்தான் இருக்கும். ஒரு அணுவை அதிலிருந்து பிரிக்க முடியாது.இதையும் மீறி, இரண்டு ஹைட்ரஜன் அணுவையும், ஒரு ஆக்ஸிஜன் அணுவையும் பிரித்தெடுத்தால், இரண்டும் நிலையான எலக்ட்ரான்களை கொண்டிருக்கும். ஒரே அளவு எலக்ட்ரான்கள் கொண்டவை, எதனுடனும் வினை புரியாது. மீறி இணைத்தால், தண்ணீருடன் சேர்ந்து அதிகமான சக்தி வெளிப்படும். காரணம் அணுக்கரு இணைவு (பியூஷன்).செயற்கையாக நீரை உருவாக்குவதில், இவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால், இயற்கையாக ஆவியாகும் கடல்நீர், மேகத்தின் மீது பட்டு குளிர்வடைந்து மழைநீராக மண்ணில் மீண்டும் விழுகிறது. அந்த நீரை அலட்சியமாக வீணாக்குகிறோம்.
Source: DINAMALAR

நியூட்ரினோ ஆய்வகம்:
"நியூட்ரினோ' துகள் குறித்த ஆராய்ச்சி, இந்திய இயற்பியல் துறையை, அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். 1,320 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மத்திய அரசின் நிதி உதவியுடன், நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தேனி மாவட்டம் தேவாரம் அருகே அம்பரப்பர் மலையில், 2027 மீ., ஆழத்தில் பாதாள சுரங்கம் அமைத்து, உலகின் மிகப்பெரிய மின்காந்தம் (50 டன்) அமைக்கப்படவுள்ளது. நியூட்ரினோ "டிடக்டராக' இந்த மின்காந்தம் செயல்படும்.உலகின் பல பகுதிகளில் நியூட்ரினோ குறித்த ஆராய்ச்சி தீவிரமாக நடைபெறுகிறது. சூரியனின் உள் வட்டம் குறித்த விபரங்கள் அறிய நியூட்ரினோ ஆராய்ச்சி முடிவுகள் அவசியம். இதற்காக அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள நியூட்ரினோ ஆய்வத்தில் நூற்றுக்கணக்கான இயற்பியல் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
நியூட்ரினோ என்றால் என்ன?:
"நியூட்ரினோ' எளிதில் அடையாளம் காண முடியாத, அணுவை விட சிறிய துகள். பெருவெடிப்பு ஏற்பட்டு, பால்வெளி வீதி (கேலக்சி) உருவான போதே நியூட்ரினோ உற்பத்தி துவங்கியது. பால்வெளியில் நட்சத்திர கூட்டங்கள் மோதும் போதும், நட்சத்திரங்கள் வெடித்து சிதறும் போதும், நியூட்ரினோ உருவாகிறது. சூரியனில் எரிசக்தி உருவாக்கத்தின் போதும், நியூட்ரினோ வெளிப்படுகிறது (சோலார் நியூட்ரினோ). ஒளியை விட கூடுதல் வேகத்தில் பயணிக்கும், நியூட்ரினோ துகள்கள் பால்வெளியிலிருந்து பூமி பரப்பை எட்டும் வரை, எந்த சிதைவும் இல்லாமல் வந்தடைகிறது. உதாரணமாக சனி கிரகத்தில், எப்போதும் ஏற்பட்டு கொண்டிருக் கும் மின்காந்த புயலில் கூட, நியூட்ரினோ துகள் பாதிப்படைவதில்லை. நியூட்ரினோக்கள் எலக்ட்ரானை போன்ற பண்புடை யது. எடையற்ற, மின் அதிர்வை ஏற்படுத்தாத நியூட்ரினோ துகள்கள், மனிதனின் உடலில், ஒரு நொடிக்கு 50டிரில்லியன் என்ற எண்ணிக்கையில் ஊடுருவுகின்றன. பூமி உருவான அடிப்படை மூலக்கூறுகளில் நியூட்ரினோவும் அடங்கியுள்ளது.
ஆராய்ச்சி எதற்காக:
நியூட்ரினோ ஆய்வு என்பது அணு துகள்கள் பற்றிய ஆய்வின் ஒரு பகுதி. பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறிவதற்கான அடிப்படை ஆராய்ச்சி. சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே அறிய உதவும், என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஏற்கனவே, உலகளவில் அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, கனடா போன்ற நாடுகளில் நியூட்ரினோ ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
பங்கேற்பவர்கள்:
ஐ.ஐ.டி., மும்பை, ஐ.ஐ.டி., கவுகாத்தி, அலிகார் யுனிவர்சிட்டி, தி இன்ஸ்டிடியூட் ஆப் மேத்தமெடிக்கல் சயின்ஸ், சென்னை, இந்திராகாந்தி சென்டர் பார் அட்டாமிக் ரிசர்ச், கல்பாக்கம், மும்பை டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச், டெல்லி யுனிவர்சிட்டி, ஜம்மு, காஷ்மீர் யுனிவர்சிட்டி உட்பட 24 நிறுவனங்கள், இந்த ஆராய்ச்சியில் பங்கேற்க உள்ளன. 100 இந்திய இயற்பியல் வல்லுநர்கள், மற்றும் ஹவாய் யுனிவர்சிட்டி ஆகியோர் இணைந்து ஆராய்ச்சியில் ஈடு பட உள்ளனர். செலவு முழுவதும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
அம்பரப்பர் மலை தேர்வு ஏன்:
தேனி மாவட்டம், தேவாரம் அருகே அம்பரப்பர் மலையை குடைந்து, பாதாள அறையில் நியூட்ரினோ ஆய்வகம் அமையவுள்ளது. நியூட்ரினோ துகள்களுடன் இணைந்து பயணிக்கும் "காஸ்மிக்' கதிர்களை வடிகட்ட, கடினமான ஒற்றை கல்லால் ஆன பாறை தேவை. 2027மீ., கடினமான, அடுக்குகளற்ற, ஒற்றை பாறையாக அம்பரப்பர் மலை உள்ளது.
மலையின் அடியில் ஆய்வகம் அமையும் போது, இடையூறு இல்லாமல் நியூட்ரினோ துகள்கள் "டிடக்டரை' வந்தடைய வாய்ப்புள்ளது. எனவே, இந்த மலையை ஆராய்ச்சியாளர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலா?:
பாதாள சுரங்கத்தில், 50 டன் எடையுள்ள மின்காந்தம் பொருத்தப்படவுள்ளது. சுரங்கம் தோண்ட, பாறையை வெடி வைத்து உடைக்கும் போதோ, வேறு தொழில் நுட்பத்தில் பாறையை உடைக்கும் போதோ ஏற்படும் அதிர்வாலும், பாறை தூசிகளாலும் அருகிலுள்ள விவசாய நிலங்கள், குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் சுற்றுப்புற கிராம மக்களிடம் உள்ளது. இது குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டிய கடமை அரசுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் உண்டு. நவீன தொழில்நுட்பத்தில் பாறையை குடைந்து பாதாள சுரங்கம் அமைக்கப்படும் என்று, டாடா கன்சல்டன்சி ஆப் பண்டமென்டல் ரிசர்ச் விஞ்ஞானி கே.மண்டல், பொட்டிபுரம் கிராமத்தில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் தெரிவித்தார். இந்த முறையில் தூசி வெளியில் பறக்காத வண்ணம் வலைகள் சுற்றி கட்டப்படும். வெட்டி எடுக்கப்படும் பாறைகள் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் என்றார்.
மக்களின் தேவை என்ன?:
ஆய்வகம் அமைய உள்ள பொட்டிபுரம் ஊராட்சி முழுவதும், விவசாயம் சார்ந்த பகுதி. இரண்டாயிரம் மக்கள் தொகை கொண்டது. ஆய்வக கட்டுமானப்பணிகளுக்கு, நிலத்தடி நீரை அதிகமாக பயன்படுத்தப்படும் போது, இங்குள்ள இறவை பாசன கிணறுகளில் நீர் பாதிக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க, இங்குள்ள வனப்பகுதிகளில் தடுப்பணைகள் அமைக்க வேண்டும். பல்லிளிச்சான்பாறை கீழ் பகுதியில், சிறு அணை கட்டி மழை நீரை தேக்க வேண்டும். பொட்டிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட டி.புதுக்கோட்டை, புதூர், பொட்டிபுரம், சின்னபொட்டிபுரம், குப்பனாசாரிப்பட்டி கிராமங்களில் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது.
இந்நிதியை பயன்படுத்தி, தடையில்லா கூட்டு குடிநீர் திட்டம், கழிவு நீரோடை வசதிகளை செய்ய வேண்டும். அவசர சிகிச்சைக்கு உத்திரவாதம் அளிக்க குப்பனாசாரிபட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி, 24 மணி நேரம் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, சிறு தொழில், கால்நடை வளர்ப்பு,விவசாய பொருட்களை சந்தைப்படுத்தும் வசதியை ஏற்படுத்த வேண்டும். ஆய்வகத்தில் இருந்து நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு,தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.ஆய்வகம் அமைப்பதால் ஏற்படும் நன்மைகள்:ஆராய்ச்சி நோக்கத்திற்காக நியூட்ரினோ ஆய்வகம் அமையவுள்ளது. ஆராய்ச்சி மாணவர்கள் ஏராளமானோர், இப்போதே, ஆய்வக கட்டுமானம் துவங்கும் முன்பே வந்து பார்த்து செல்கின்றனர். கல்வி, சுற்றுலா மேம்பட வாய்ப்புள்ளது. வெளிமாநில, வெளிநாட்டு ஆராய்ச்சி மாணவர்கள் வருகையால், மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி மேம்படும்.
கட்டுமான பணிகளில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், என்று மாவட்ட நிர்வாகம் வாக்குறுதி அளித்துள்ளது. தென்மாவட்ட மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்பின் மீது ஆர்வம் அதிகரிக்கும். போக்குவரத்து வசதிகள் மேம்படும். உதாரணமாக மதுரை-எர்ணாகுளம் ரயில் பாதை நியூட்ரினோ ஆய்வகம் வழியாக செல்வதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதற்கான முதற்கட்ட ஆய்வுப்பணிகளை, தென்னக ரயில்வே கட்டுமான துறையினர் மேற்கொண்டுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளில், இதற்கான ஆதரவு தீர்மானங்கள் பெறப்பட்டுள்ளன.
Source: DINAMALAR
Subscribe to:
Posts (Atom)