Saturday, October 31, 2015

பருவநிலை மாற்றம்: இலக்கை எட்டமுடியும் என்று ஐநா நம்பிக்கை

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பான பரிந்துரைகளை உள்ளடக்கிய தனது ஆய்வறிக்கையை ஐநா வெளியிட்டுள்ளது.

இதுவரை முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் மிகவும் விரிவான யோசனைகளைக் கொண்டதாக இந்த அறிக்கை பார்க்கப்படுகின்றது.

புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் உறுதிமொழிகளை அளித்துள்ள பெரும் எண்ணிக்கையிலான செல்வந்த மற்றும் வறிய நாடுகளின் விபரங்களையும் இந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளது.

தங்களின் பரிந்துரைகள் அனைத்தும் முழுமையாக அமல்படுத்தப்பட்டாலும் புவியின் வெப்பநிலை அபாயகரமான எல்லையை தாண்டிச் செல்லக்கூடும் என்றும் ஐநா எச்சரித்துள்ளது.

ஆனால், தங்களின் யோசனைகள் முக்கிய முன்னேற்ற நகர்வு என்று கூறியுள்ள ஐநா, இலக்குகள் இன்னும் எட்டப்படக்கூடிய நிலையில் தான் இருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளது.

பருவநிலை மாற்றம் தொடர்பில் உலகளாவிய ரீதியில் புதிய உடன்பாடு ஒன்றை எட்டும் முயற்சியாக வரும் டிசம்பரில் பாரிஸில் நடக்கவுள்ள மாநாட்டை முன்னிட்டே இந்த அறிக்கை வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source:BBC Tamil

No comments:

Post a Comment